கரூரில் தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு - காவல்துறையை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்!
07:45 PM Oct 27, 2024 IST
|
Murugesan M
கரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் தரைக்கடைகள் அமைக்க காவல்துறை தடை விதித்தது. ஆனால், தடையை மீறி ஒருசில வியாபாரிகள் அங்கு தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தரைக்கடைகளை அகற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து தாலூக்கா அலுவலகம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
பின்னர் அங்கு வந்த கரூர் டிஎஸ்பி செல்வராஜ், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement