செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

01:12 PM May 16, 2025 IST | Murugesan M

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Advertisement

லாலா பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவிக்குப் பள்ளி ஆசிரியர் நிலவொளி மற்றும் தாளாளர் யுவராஜ் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்தனர்.

பெற்றோர் புகாரின் பேரில் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

சாட்சி விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் நிலவொளி மற்றும் யுவராஜுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
Tags :
editor sentenced to rigorous imprisonment in POCSO caseKarur: TeacherMAINTn newsகரூர்போக்சோ
Advertisement
Next Article