கரையை கடந்தும் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் - 48 செ.மீ. கொட்டி தீர்த்த மழை!
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நேற்று மாலை 5.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியதாகவும், இரவு 11.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடந்த பின்பும், புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பாலச்சந்திரன், இதனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் அதிகனமழை பெய்துள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது புதுச்சேரியில் 48 புள்ளி 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3 இடங்களில் அதி கனமழையும்,
6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவலளித்துள்ளார்.