செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகாவில் இரண்டு குழந்தைகள் கொலை - தற்கொலை செய்து கொண்ட தாய்!

12:26 PM Apr 04, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதியில் 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குப்பி பகுதியில் விஜயலட்சுமி என்பவர் கணவர் மற்றும் 2 மாற்றுத்திறன் மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், 2 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகன்களுடன் விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINMother commits suicide after killing two children in Karnataka!கர்நாடகா
Advertisement