செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் கொடுக்காதால் நின்றுபோன திருமணம்!

03:35 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கர்நாடகாவில் குடிக்கத் தண்ணீர் கொடுக்காததால் திருமணம் நின்றுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம், தாவணகெரே ஜகளூரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும், துமகூரு பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. சித்ரதுர்கா பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், உணவு அருந்தச் சிலர் தாமதமாக வந்துள்ளனர்.

அப்போது, விருந்தினர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் குடிநீர் கொடுக்காததால் இருவீட்டார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு தொடங்கிய தகராறு காலை வரை நீடித்ததால், மணமகளும், மணமகனும் திருமணம் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனதால் அனைவரும் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

Advertisement

Advertisement
Tags :
A wedding in Karnataka was stopped because drinking water was not provided!MAINநின்றுபோன திருமணம்
Advertisement