செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்!

04:38 PM Jan 22, 2025 IST | Murugesan M

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,

"கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது, இது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.   காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது என்றும்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINTruck overturn accident in Karnataka: Prime Minister Modi condoles the family of the deceased!
Advertisement
Next Article