கர்நாடகா : உரிமையாளரின் குடும்பத்தை உயிரை கொடுத்து காத்த நாய்!
05:24 PM Mar 22, 2025 IST
|
Murugesan M
கர்நாடகாவில் நாகப்பாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய், தனது உயிரைக் கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரைக் காப்பாற்றியது.
Advertisement
ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமந்த் கவுடா என்பவரின் வளர்ப்பு நாய் பீமா, அவரது கோழிப் பண்ணைக்குள் நுழைந்த 12 அடி நீள நாகப்பாம்புடன் 40 நிமிடங்கள் சண்டையிட்டு உயிரை விட்டது.
உரிமையாளரின் குழந்தை மற்றும் குடும்பத்தாரைக் காப்பாற்றும் நோக்கில், வளர்ப்பு நாய் பீமா உயிரிழக்கும் முன்பாக, அந்த பாம்பை 11 துண்டுகளாகக் கடித்துக் குதறியது.
Advertisement
Advertisement