செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகா : சுற்றுலா பயணியை துரத்தி தாக்கிய யானை!

01:03 PM Apr 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கர்நாடகாவில் ஜீப்பில் சென்ற சுற்றுலாப் பயணிகளைக் காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்திற்குக் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் ஜீப்பில் சுற்றுலா சென்றனர்.

அவர்களில் ஒருவரைக் காட்டு யானை கொடூரமாகத் துரத்தி துரத்தி தாக்கியதால் உடன் வந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் கத்தி கூச்சலிட்டுக் காட்டு யானையைத் துரத்தியடித்தனர்.

Advertisement

பின்னர் படுகாயமடைந்த நபரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தை  அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertisement
Tags :
Karnataka: Elephant chases and attacks touristMAINகர்நாடகாதாக்கிய யானை
Advertisement