செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகா : ரூ.75 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்!

02:26 PM Mar 17, 2025 IST | Murugesan M

கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பிலான  போதைப்பொருளைக் கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டுப் பெண்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானம் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக  மங்களூரு குற்றப்பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நீலாத்ரி நகருக்கு விரைந்த காவல்துறை சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த தென்னாப்பிரிக்கப் பெண்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது அவர்களிடம் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 37 புள்ளி 870 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறை, 2 லட்சத்து 18 ஆயிரத்து 460 ரூபாய் பணம், 4 செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக மங்களூரு பகுதியில் போதைப்பொருள் விற்றதாக ஹைதர் அலி என்பவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Karnataka: Methamphetamine drugs worth Rs. 75 crore seized!MAINகர்நாடகபோதைப்பொருள் பறிமுதல்
Advertisement
Next Article