கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு : தலைவர்கள் இரங்கல்!
09:40 AM Dec 10, 2024 IST
|
Murugesan M
கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை
அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.Advertisement
எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த 2009 முதல் 2012-ஆம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 1999 முதல் 2004-ஆம் ஆண்டுவரை கர்நாடக முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். அண்மையில் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி எஸ்.எம்.கிருஷ்ணா உயிரிழந்தார். அவரது ஆறு தசாப்த கால அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், கடந்த ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement