கல்குவாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயிகள் அச்சம்!
07:29 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவள கொள்ளை குறித்து புகாரளிப்பவரின் தகவல்களை, அதிகாரிகளே கல்குவாரி உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Advertisement
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணை ஆட்சியர் கோகுல் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய விவசாயிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏராளமான கல்குவாரிகள் விதிகளை மீறி கனிம வளங்களை வெட்டி எடுப்பதாக கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தால், அவர்களே கல்குவாரி உரிமையாளர்களிடம் புகார்தாரரின் தகவல்களை கசிய விடுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் கல்குவாரி உரிமையாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement