கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...! : கல்லூரியில் கலைக்கட்டிய பொங்கல் விழா..!
சென்னை அரும்பாக்கத்திலுள்ள டிஜி வைஷ்னவ் கல்லூரியில் மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்... அதுப்பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!
புதுடிரெஸ், கரும்பு , புதுப்படம்னு ஃபேம்லியோட பொங்கல் செலிபிரேட் பண்றது ஜாலியான விஷ்யம்தான்... அதுவே ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம்னு காலேஜ் ஸ்டூடன்ஸோட பொங்கல் செலிபிரேட் பண்ணா எப்படி இருக்கும்... எஸ்... இப்போ நாம டிஜி வைஷ்னவ் காலேஜ்லதான் இருக்கோம்... பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாம இந்த கல்லூரி மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாட்டிட்டு இருக்காங்க... நாமலும் அவங்களோட பொங்கல் கொண்டாட்டத்துல கலந்துட்டு மாசா செலிபிரேட் பண்ணலாம் வாங்க...
காலேஜ் உள்ள நுழைஞ்சதும் கலர்ஃபுல்லான செலிபிரேஷன் மூடுக்கு ரெடி ஆயிட்டேங்க... அத்தோட ஓபனிங்கே கண்ணுக்கு விருந்து வைக்குற மாதிரி கல்லூரி மாணவர்களும் professors-உம் கலர்கலரா கோலம் போட்ருந்தாங்க... Normal-அ பொங்கல் கோலம்போட சொன்னா மாட்டுக்கு பதில் குள்ளநரி , எறும்புதிண்ணி, ஓனாய்-னு கொடூரமா வரஞ்சு வைப்பாங்க.. ஆனா இவங்க ஜல்லிகட்டு மாடு, பொங்கல்பானைலாம் தத்ரூபமா வரைஞ்சு வேர லெவல் பண்ணிட்டாங்க...
கண்களை கவர்ர கோலங்கள வேடிக்கை பார்த்துட்டு அடுத்து நாவுக்கு விருந்து வைக்க சர்க்கரை பொங்கல டேஸ்ட் பண்ண கிளம்பிட்டோம்..!
பொங்கல் இங்க சுடச் சுடச் செஞ்சுட்டு இருக்கும்போது... அந்தபக்கம் பார்த்தா ஒரே கூட்டம்... என்னடானு எட்டிப்பார்த்தா... நம்ம கல்லூரி மாணவர்கள்லான் ஒன்னு சேர்ந்து உரி அடி அடிச்சு விளையாடிட்டு இருந்தாங்க... நான்லா வேடிக்கை பார்க்குறதோட சரி... உரிலான் அடிக்குறதில்லங்க...ஹான் அடிச்சு நொறுக்குப்பா... அடிச்சு நொறுக்கு... தம்பி உரி அடிக்குறேன்னு பக்கத்துல இருக்கவங்களோட மண்டைய ஒடச்சிறாதப்பா...
பொங்கலுக்கு எப்டி முந்திரியும் திராட்சையும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலோ... அதுமாதிரி இந்த கொண்டாட்டதுக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகம் சேர்க்க கோலாட்டம், சிலம்பம், நாட்டுப்புற நடனம்னு கல்லூரி மாணவர்கள் வேரலெவல்ல performance செஞ்சு பின்னி எடுத்துட்டாங்க....
பொண்ணுங்களுக்கு ஈக்குவலா டஃப் கொடுக்க... இன்னொரு பக்கம் நம்ம பசங்களாம்... சீறிப்பாய்ஞ்சு சிலம்பம் சுத்தி மாஸ் காட்டிட்டாங்க...
திருவிழான்னா ஆட்டம்பாட்டம் இல்லனா எப்டி... சும்மா வேடிக்கை பார்க்கபோனவங்களையும் இந்த போட்ட டிஜே சாங்ஸ் கலத்துல இறங்கி ஆடவச்சுருச்சு...
ஆட்டம்போட்ட கையோட அடுத்து நாங்க போனது இந்த குட்டி வில்லேஜ் செட்டப்புக்குதாங்க... குடிசை வீடு, மாட்டு வண்டி , வாடிவாசல், விவசாயம்னு... இந்த குட்டி செட்டப் டைம் டிராவல் செஞ்சு நம்ம எல்லாரையும் நம்மளோட காலேஜ் exebition days-ஸ்க்கே அழைச்சுட்டு போயிடுச்சுனு சொல்லலாம்...
பொங்கல் சாப்பிட்டாதான் இனிக்குமா என்ன... கல்லூரி மாணவர்களோட சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடுனது பொங்கல் சாப்பிடாமலேயே ஒரு இனிமையான அனுபத்தை கொடுத்துருச்சு... அப்புறம் என்ன நீங்களும் உங்களோட உற்றார் உறவினர்களோட சேர்ந்து இந்த வருஷ பொங்கல சிறப்பா கொண்டாடி எஞ்சாய் பண்ணுங்க...!