செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கல்விக்கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்!

12:43 PM Mar 27, 2025 IST | Murugesan M

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்விக்கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

2016-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி திருப்பூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

Advertisement

அதில், தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அளித்த கல்விக்கடன் ரத்து என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகளின் கல்விக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபிக் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
MAINPublic interest litigation filed in the Madras High Court seeking an order to the Tamil Nadu government to implement the education loan waiver scheme!பொதுநல வழக்கு தாக்கல்
Advertisement
Next Article