கல்வி தரத்தை மேம்படுத்தவே கட்டாய தேர்ச்சி முறை ரத்து - அண்ணாமலை விளக்கம்!
கல்வி தரத்தை மேம்படுத்தவே கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த அவர்,"தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளதாகவும், கல்வி தரத்திற்காக கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேசிய சராசரியை விட தமிழக மாணவர்களின் கல்வித்தரம் குறைவாக உள்ளதாகவும், இந்தியாவை பொருத்தவரை கல்வித்தரத்தை உயர்த்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் கல்வியின் தரம் உயர்ந்து வருவதாகவும், "பிஎம்ஸ்ரீ பள்ளியில் தமிழக அரசு அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.
விஜயகாந்த் நினைவு நாள் நிகழ்ச்சியில் பாஜக பங்கேற்கும் என்றும், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட சொத்துகள் என்பது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மக்களின் சொத்து என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.