களத்திற்கே வராதவர்கள் திமுகவின் நம்பிக்கை வீணாகும் என பேசுகின்றனர் - அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!
06:10 PM Dec 07, 2024 IST | Murugesan M
தமிழகத்தின் அரசியல் தெரியாமல், அறியாமையில் சிலர் கருத்து கூறி வருவதாகவும், அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும் எனவும் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் நம்பிக்கை வீணாகும் என களத்திற்கே வராதவர்கள் பேசுவதாக தெரிவித்தார்.
Advertisement
அடுத்த முறையும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு என்றும், திமுகஆட்சிக்கு வராது என நினைப்பவர்கள் கனவு பகல் கனவாகவே முடியும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
Advertisement
Advertisement