கள்ளக்குறிச்சி : மஞ்சள் காமாலை நோயால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!
07:22 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை 50-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் முகாம் அமைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement