செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கள்ளக்குறிச்சி : வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சுடு!

03:24 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே வேட்டையாட முயன்றவர்களைப் பிடிக்க முயன்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

Advertisement

பாக்கம் பாடி, குரால் பகுதிகளைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் வேட்டையாடுவதற்காக, செல்லக்கண்ணு, பாலு ஆகிய இருவர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர்.

வனத்துறையினர் அவர்களைக் கைது செய்ய முயற்சித்தபோது, பாலு என்பவர், வனத்துறை அதிகாரியான வேல்முருகனின் காலில் துப்பாக்கியால் சுட்டார்.

Advertisement

இதில், பலத்த காயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலு தப்பி ஓடிய நிலையில், செல்லக்கண்ணுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement
Tags :
Kallakurichi: Shooting at a forest officer!MAINகள்ளக்குறிச்சிவனத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சுடு
Advertisement