கள்ள ஓட்டு மூலம் திமுக வெற்றி பெற்றுள்ளது - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு!
09:32 AM Feb 09, 2025 IST
|
Ramamoorthy S
பெரியாரா? பிரபாகரனா? என்று வந்தபோது பிரபாகரன்தான் வெற்றி பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
Advertisement
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாம் தமிழர் கட்சி வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த தேர்தலைவிட தற்போது கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்கள் விரக்தியில் உள்ளனர். பெரும்பாலும் கள்ள வாக்குகள் தான் போடப்பட்டுள்ளது. காசு, மிரட்டல் செய்து நெருக்கடி கொடுத்து தான் திமுக வாக்குகளை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
Advertisement
வழக்கு இல்லாமல் விடியாது கிழக்கு அதனால் எவ்வளவு வழக்குகள் இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement