கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - எம்.பி., ஆய்வு!
10:49 AM Dec 09, 2024 IST | Murugesan M
நாமக்கல் மாவட்டம் இருக்கூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எம்.பி. மாதேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருக்கூர் கிராம பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபடும் என்பதால் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி. மாதேஸ்வரன், கிராமத்தை சுற்றி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, அரசு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
Advertisement
Advertisement