செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு - அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

11:46 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னையில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் சேகர் பாபுவை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரம் பகுதியில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது இதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற இருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அதிக துர்நாற்றம் வீசும் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், அமைச்சர் சேகர் பாபுவை முற்றுறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு விருப்பம் இல்லை எனில் இந்த திட்டம் கொண்டு வரப்படாது என, அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து, அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இதனிடையே, அமைச்சர் சேகர் பாபு உடன் வருகை தந்த ஆதரவாளர் ஒருவர், பொது மக்களை நோக்கி, திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும் என்றும், நீங்கள் என்ன கலெக்டரா? என பொது மக்களை நோக்கி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கிருந்த பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement
Tags :
Broadway AshirvadapuramChennaiconstruction of a sewage pumping stationFEATUREDMAINminister sakerbabuProtesting against the construction of a sewage pumping station
Advertisement