காங்கிரஸ் அரசு ஒதுக்கிய நிதியை விட தற்போது அதிக நிதி : அஷ்வினி வைஷ்ணவ்
07:07 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது 7.5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முந்தைய UPA ஆட்சிக்காலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறினார்.
தற்போதைய பாஜக ஆட்சிக்காலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement