செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்ட 60 ஆண்டுக் காலம் எடுத்தது : அண்ணாமலை

05:58 PM Apr 07, 2025 IST | Murugesan M

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்ட 60 ஆண்டுக் காலம் எடுத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறிய பிரதமரை விமர்சித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையக் காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுக் காலம் எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போது இந்தியாவின் ஜிடிபி 4 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதை ப.சிதம்பரம் ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், 2009ல் இருந்து 2014 வரை ரயில்வே திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டிற்கு 900 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

2025-26 நிதியாண்டில், ரயில்வே திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டிற்கு 6 ஆயிரத்து 626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaiIt took 60 years for the country's GDP to reach one trillion dollars under Congress rule: AnnamalaiMAINtn bjp
Advertisement
Next Article