ராகுல் காந்தி தள்ளியதில் காயமடைந்த பாஜக எம்.பிக்கள் - உடல்நலம் விசாரித்த மத்திய அமைச்சர்கள்!
02:45 PM Dec 19, 2024 IST
|
Murugesan M
காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கியதில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
Advertisement
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளுமுள்ளு காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கியதில் பாஜகவை சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், முகேஷ் ராஜ்புத் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் செளஹான், பிரஹலாத் ஜோஷி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
Advertisement
Advertisement