காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய தவெக- வினர்!
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை தவெக- வினர் வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் சிவபிரகாஷ், சூரியமூர்த்தி ஆகிய சகோதரர்கள் வசிக்கின்றனர். இவர்களின் வீட்டிற்குள் நுழைந்த தவெக கட்சியை சேர்ந்த சிலர் இருவரையும் அவர்களின் தந்தையையும் சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதோடு காங்கிரஸ் கொடியையும் சேதப்படுத்தி இருக்கின்றனர்.
தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவபிரகாஷ், சூரியமூர்த்தி இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், போஸ்டர் ஒட்டும் விவகாரத்தில் தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து தவெக-வை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வரும் நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.