காங். ஆட்சியில் விலைவாசி உயர்வு 10.2 சதவீதமாக இருந்தது! : நிர்மலா சீதாராமன்
04:43 PM Dec 17, 2024 IST
|
Murugesan M
கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Advertisement
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகளில் கட்டுக்கடங்காத வகையில் விலைவாசி உயர்ந்ததாக குற்றச்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு 10.2 சதவீதமாக இருந்தாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
Next Article