செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காசிமேடு : மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் கத்தாழை மீன்கள்!

12:29 PM Apr 06, 2025 IST | Murugesan M

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ குணமுடைய கூறல் கத்தாழை மீன் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

காசிமேட்டைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில் 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மருத்துவ குணமுடைய கூறல் கத்தாழை என்ற மீன் அதிக அளவில் வலையில் சிக்கியது.

ஒரு மீன் 7 கிலோ என்ற எடை கணக்கில் ஒரு டன் அளவிலான மீன் சிக்கியது. கூறல் கத்தாழை மீனின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் மட்டி என்ற பொருள் மருத்துவத்திற்குச் சிறந்தது எனக்கூறப்படும் நிலையில் மீன்கள் அனைத்தும் 30 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இன்று விடுமுறை தினம் என்பதாலும் , இந்த மீன்களைப் பார்ப்பதற்காகவும் காசிமேட்டுச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது.

Advertisement
Tags :
Kasimedu: The fish caught in fishermen's nets!MAINகாசிமேடு
Advertisement
Next Article