காஞ்சிபுரம் அருகே தீப்பிடித்து எரிந்த பிளாஸ்டிக் குடோன்!
09:28 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோன் தீப்பிடித்து எரிந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Advertisement
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பென்னலூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் கழிவு குடோன் உள்ளது. இங்கே திடீரென தீப்பற்றிய நிலையில், குடோன் முழுவதும் தீ மளமளவென பரவியது.
இதில் அங்கிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில், புகையால் அக்கம்பக்கத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement