காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
12:05 PM Mar 27, 2025 IST
|
Murugesan M
காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
கீழம்பி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட நத்தம் புறம்போக்கு நிலத்தைக் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலத்தை வீட்டுமனை பட்டாக்களாகப் பிரித்து வெளியூர் மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனை அறிந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement