செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காட்டுமன்னார்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார்!

12:23 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

காட்டுமன்னார்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி, 3 பேர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி பகுதியைச் சேர்ந்த  வீரபாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

அப்போது,  அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில், காரை அதிவேகமாக ஓட்டி வந்த சந்தீப் குமார் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
A car crashed into a two-wheeler near Kattumannarkovil!MAINஇருசக்கர வாகனம் மீது மோதிய கார்கடலூர் மாவட்டம்காட்டுமன்னார்கோவில்
Advertisement