For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் சென்னையில் குற்ற சம்பவங்கள் நிகழவில்லை : சென்னை பெருநகர காவல் துறை

02:30 PM Jan 17, 2025 IST | Murugesan M
காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் சென்னையில் குற்ற சம்பவங்கள் நிகழவில்லை   சென்னை பெருநகர காவல் துறை

காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது, சென்னை பெருநகரில் எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நிகழவில்லை என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

காணும் பொங்கலை கொண்டாட நேற்று சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

Advertisement

அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, 16 ஆயிரம் காவல் அதிகாரிகள், ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், டிரோன் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,
குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் கண்காணித்து, கடற்கரை பகுதிகளில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளின் கையில் Wrist band எனப்படும் அடையாள அட்டையில் பெயர் தொலைபேசி எண்ணை எழுதி அனுப்பியது பெரிதும் உதவியதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement