காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்!
தமிழகத்தில் காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலாதலங்களில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
Advertisement
சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான செம்மொழி பூங்காவிற்கு நாள்தோறும் வரும் எண்ணிக்கையை விட இன்று அதிக அளவில் மக்கள் வருகையானது பதிவாகியுள்ளது. அவர்கள் மலர்களை கண்டு ரசித்து குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இதேப்போன்று கடற்கரை, மால்களிலும் மக்கள் குவிந்து விடுமுறையை கொண்டாடினர்.
இதேப்போல் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள், பரிசல் பயணம் மேற்கொண்டும், ஆயில் மசாஜ் செய்தும், பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்தும் உற்சாகமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாதலங்களான திற்பரப்பு அருவி,மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனைதொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடினர்.