For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காணும் பொங்கல்! : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

06:12 PM Jan 14, 2025 IST | Murugesan M
காணும் பொங்கல்    சென்னையில் போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

16.01.2025 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

Advertisement

மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும்.

கலங்கரை விளக்கம் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி' ஆகவும் செயல்படும்.

காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 1300 மணி முதல் 2200 மணி வரை அனுமதிக்கப்படாது.

எனவே வாகன ஒட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

1. ஃபோர்ஷோர் சாலை
2. விக்டோரியா வார்டன் விடுதி
3. கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
4. பிரசிடென்சி கல்லூரி
5. மெட்ராஸ் பல்கலைக்கழகம்
6. டிடி.கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
7. MRTS-
8. லேடி வெலிங்டன் பள்ளி
9. குயின் மேரிஸ் மகளிர் கல்லூரி
10. சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
11. பி.டபிள்யூ.டி. மைதானம் (செயலகத்திற்கு எதிரே)
12. செயின்ட் பேட் மைதானம்
13. அன்னை சத்யா நகர்
14. ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
15. செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)

Advertisement
Tags :
Advertisement