செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காணும் பொங்கல் தினத்தில் குப்பை போடும் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

03:01 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

காணும் பொங்கல் தினத்தில் பொதுஇடங்களில் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமாக மாறியது தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாச்சார பண்டிகைகளின்போது குப்பை போடுவது நாடு முழுவதும் உள்ள பிரச்னை என்றும், மக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அப்போது, குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் அறிவிக்க கூடாது என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.  மேலும், விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவதுதான் கலாச்சாரமே தவிர குப்பை போடுவது கலாச்சாரம் அல்ல எனத் தெரிவித்த தீர்ப்பாயம்,  விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டது.

Advertisement
Tags :
FEATUREDKanum Pongal.MAINPollution Control BoardSouthern Regional National Green Tribunaltamil nadu government
Advertisement