காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்! - இருவர் கைது!
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவர் பணி செய்யும் இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய இளைஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வரும் இளம்பெண், அவருடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். சித்திக்ராஜா திடீரென காதலை வெளிப்படுத்தியதால் கடந்த 5 மாதங்களாக அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இளம்பெண் வேலைபார்க்கும் கடைக்கு தனது நண்பருடன் சென்ற சித்திக்ராஜா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சித்திக்ராஜா உள்ளிட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே விசாரணையின்போது தப்பியோட முயன்ற சித்திக்ராஜா தவறி விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.