செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை!

06:12 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அரியலூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், கடலூரைச் சேர்ந்த உறவினரின் மகனுக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்த வந்த திவ்யா, அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இவர்கள் காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால், கடந்த சில நாட்களாக இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
Lovers commit suicide because they opposed love!MAINகாதலர்கள் தற்கொலை
Advertisement