செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவர் வெறிச்செயல்!

01:24 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பூர் சத்யா காலனி பகுதியில் வசித்து வரும் 23 வயதான இளம்பெண்ணுக்கும், கோவையில் ரோபாட்டிக் இன்ஜினியரிங் படித்து வந்த தீபக் என்பவருக்கும் இன்ஸ்ட்கிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி அந்த இளைஞர் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அந்த பெண் காதலை நிராகரித்துள்ளார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீபக், பெண்ணின் வீட்டிற்கு சென்று கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர், அந்த பெண்ணின் வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
College student went on a rampage after refusing to accept love!MAINtamil nadu news
Advertisement