For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காத்திருக்க வேண்டாம் ; உடம்பை கவனிங்க : விமான நிலைய CISF வீரர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Jan 18, 2025 IST | Sivasubramanian P
காத்திருக்க வேண்டாம்   உடம்பை கவனிங்க   விமான நிலைய cisf வீரர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு   சிறப்பு தொகுப்பு

விமான நிலையம் ஒன்றில் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, CISF அதிகாரிகள் உடற்பயிற்சி அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

நம் அவசர பயணங்களின்போது தாமதமாகும் விமானங்கள் நம் பொறுமையை சோதிக்கும். விமான நிலையத்தின் உள்ளே அமர்ந்து, போர்டிங் செய்வதற்கான வாயில்கள் திறக்கும் வரை காத்திருந்து, நாம் செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி அமரும் அந்த காலகட்டம், நாம் மேற்கொள்ளும் விமான பயணத்தை விட நீண்டதாக சில நேரங்களில் தோன்றியிருக்கலாம். ஆனால் இனி அதற்கான அவசியம் இருக்காது என்பதையே உணர்த்துகிறது இந்த வீடியோ பதிவு.

Advertisement

காலை நேரங்களில் விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகளின் உடல் நலனை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடற்பயிற்சிகள் அளிக்கும் முயற்சியை விமான நிலைய CISF வீரர்கள் முன்னெடுத்துள்ளனர். ஜோத்பூர், உதய்பூர், டேராடூன், குவாலியர், புண்டார் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களில், இந்த சேவையை விருப்பமுள்ள பயணிகள் பயன்படுத்திக்கொள்ள விமான நிலைய நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.

விமான நிலைய CISF வீரர்களின் இந்த சிந்தனைமிக்க முயற்சியால், பயணிகள் விமானங்களுக்காக காத்திருக்கும் நேரத்தில், உடற்பயிற்சிகள் மூலம் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

Advertisement

இந்த சேவை விமான பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நபர் ஒருவர், மிகவும் சுவாரஸ்யமான ஒரு அனுபவத்தை விமான நிலையத்தில் எதிர்கொண்டதாக குறிப்பிட்டு, பயணிகள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த சேவை பிற விமான நிலையங்களிலும் தொடர வேண்டுமென அவர் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயணிகளின் இதுபோன்ற கருத்துக்கள் இந்த முயற்சியை முன்னெடுத்த விமான நிலைய CISF வீரர்களுக்கு, கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என அவர்களின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கு மூலம் பயணியின் பதிவில் கமென்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த பயணியின் பதிவை மேற்கோள்காட்டி, விமான நிலைய CISF வீரர்களின் முயற்சிக்கு ஆதரவாக ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement