காந்திமதி யானை மறைவு! - அண்ணாமலை இரங்கல்
12:49 PM Jan 12, 2025 IST
|
Murugesan M
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானையான காந்திமதி யானை, உடல் நலக்குறைவால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல், சுமார் நாற்பது ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலின் ஒரு அங்கமாக விளங்கிய காந்திமதி யானையை, இனி கோவிலில் காண முடியாது என்பது, பக்தர்களுக்கு மிகவும் சோகமான செய்தியாகும். காந்திமதி யானை, இறைவன் திருப்பாதங்களைச் சென்றடைந்திருக்கிறது. ஓம் சாந்தி! எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Next Article