செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காந்தி விழா தொடர்பாக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது - ஆளுநர் ஆர்.என்.ரவி

03:32 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

காந்தி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாக  தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, முதலமைச்சரிடம் தான் முன்வைத்த கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என தெரிவித்துள்ள ஆளுநர், காந்தி நினைவு நாள் நிகழ்வுகளை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் அர்த்தமுள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், காந்தி இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Advertisement
Tags :
Dravidian ideologyFEATUREDGandhi function issueGandhi MandapamGandhi's memorial eventsGovernor R.N.RaviMAINMK Stalin
Advertisement