செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

06:45 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Advertisement

இந்நிலையில் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தவறு என மத்திய அரசு, இலங்கை தூதரிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே மீனவர்கள் விவகாரத்தை கையாள வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் மீனவர்கள் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது எந்த சூழலிலும் ஏற்புடையது அல்ல என இலங்கை தூதரிடம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
central governmentIndia CondemnMAINshooting incident on Karaikal fishermen.Sri Lankan Ambassador.Sri Lankan governmentSri Lankan Navy arrested all 13 fishermen
Advertisement