செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூடு - வெளியானது வீடியோ!

10:05 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுப்பிடித்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த வேல் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், 13 மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். கோடியக்கரை அருகே இரவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காரைக்கால் மீனவர்கள் இருவர் காயமடைந்த நிலையில், 13 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது. தொடர்ந்து கைதான மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, காயமடைந்த 2 மீனவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் மீனவர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் 'சாய் முரளி' சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதனிடையே, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எதிராக டெல்லியில் உள்ள இலங்கை தூதரக ஆணையருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

Advertisement
Tags :
FEATUREDKaraikal fishermenKaraikal fishermen shooting videoKlinjal Medu fishing villageKodiyakaraiMAINsri lankan navy
Advertisement