கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்தின் சீரிய முயற்சியால் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படவுள்ளது.
Advertisement
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், வரும் 13-ம் தேதி காலை 4 மணிக்கு அண்ணமலையார் கோயில் கருவறையிலும், மகாதீபம் அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீதும் ஏற்றப்படவுள்ளது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க ABGP அமைப்பு பல முயற்சிகளை முன்னெடுத்தது.
இதன் பயனாக வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படவுள்ளது. பேருந்தில் பயணம் செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் இந்த சிறப்பு ரயிலால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.