செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெள்ளியங்கிரி மலை கோயிலில் விளக்கேற்றும் விவகாரம் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

09:52 AM Dec 10, 2024 IST | Murugesan M

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோயிலில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கு ஏற்ற அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோயிலில் நடப்பாண்டுக்கான கார்த்திகை தீப உற்சவத்துக்கு மகா தீபம் ஏற்ற கடந்த அக்டோபர் 29-ம் தேதி விண்ணப்பித்தும் அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் பூஜை செய்ய 3 பேருக்கு கடந்த நவம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

மேலும் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தி மாவட்ட வன அதிகாரி அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்துக்குள் மலையில் ஏறி, இறங்க முடியாது என்றும், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
karthigai deepammadras high courtMAINtamil nadu governmentVelliangiri Hill Temple
Advertisement
Next Article