கார்த்திகை தீப திருவிழா - திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் வலம் வந்த சுப்பிரமணிய சுவாமி!
11:32 AM Dec 06, 2024 IST | Murugesan M
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் மயில் வாகனத்தில் சுவாமி வலம் வந்தார்.
இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நிகழாண்டு கார்த்திகைத் திருவிழா அண்மையில் தொடங்கியது.
Advertisement
விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகன திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 12ஆம் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13 ஆம் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும்.
Advertisement
Advertisement