கார்த்திகை மாத அமாவாசை - நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்ட மக்கள்!
03:50 PM Nov 30, 2024 IST
|
Murugesan M
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர்.
Advertisement
தமிழகம் மட்டுமல்லாது, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர். மேலும், அவர்கள் அனைவரும் கடலில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தனர்.
பின்னர், ராமேஸ்வரம் கோயிலுக்கு உள்ளே சென்ற பக்தர்கள், அங்குள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும், தற்போது, சபரிமலை ஐயப்பன் சீசன் என்பதால், ஐயப்பன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
Next Article