கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிப்பு!
கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்நிறுவனங்கள் வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டிப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால் வருமான வரி செலுத்துவதற்கு நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படிவம் 3CEB-ல் உள்ள விலைச் சான்றிதழை மாற்றுதல் மற்றும் படிவம் 10DA போன்ற பிற வருமான வரிப் படிவங்களுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவை நீட்டித்ததன் மூலம் பண்டிகை கால கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வருமான வரி செலுத்த வேண்டும் எனும் அழுத்தம் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.