காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் - வானிலை மையம் தகவல்!
06:40 PM Dec 21, 2024 IST
|
Murugesan M
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் கிழக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும்,விசாகப்பட்டினத்தில் இருந்து தென் - தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 490 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 580 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மெதுவாக கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் அதன் தீவிரத்தை இழந்து, படிப்படியாக வலுவிழக்கு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
Next Article