செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காலிஸ்தான் பிரிவினைவாதம், 10,500 URL முடக்கம் : மத்திய அரசு அதிரடி - சிறப்பு கட்டுரை!

08:05 PM Dec 04, 2024 IST | Murugesan M

இந்தியாவில் பிரிவினையை தூண்டும், காலிஸ்தான் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக செயல்படும், 10,000-க்கும் மேற்பட்ட URL-களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடங்கியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. சீக்கியர்களுக்கு, காலிஸ்தான் என்னும் தனி நாட்டை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு வெளியே அயல்நாட்டில் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள தீவிரவாதிகளால் திட்டமிடப்படுகின்றன.

Advertisement

காலிஸ்தானுக்கு ஆதரவாக 'வாக்கெடுப்பு 2020' என்ற பரப்புரையை குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடங்கினார். சமூக ஊடகங்கள் மூலமாகவும், கணிசமான சீக்கியர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான கூட்டங்களை ஏற்பாடு செய்வதும், அதன் மூலமாக தனி காலிஸ்தான் மாநிலத்தை உருவாக்கவும், வாக்கெடுப்பு 2020 பிரச்சாரத்தை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு நடத்தியது.

இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தீவிரவாதிகளுக்கு கனடா புகலிடமாக உள்ளது என்றும், கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையை கனடா அரசே தூண்டுகிறது என்றும், பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் தெரிவித்த அதே நாளில் காலிஸ்தான் வாக்கெடுப்பை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு நடத்தியது.

குறிப்பாக, கனடாவில் தீவிரவாத சக்திகளின் "இந்தியா-விரோத" நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் எழுப்பிய நிலையில், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு, அதே நாளில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் தனி காலிஸ்தான் வாக்கெடுப்பை நடத்தினர்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 ( Unlawful Activities (Prevention) Act, 1967) சட்டத்தின் கீழ் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து தடை செய்தது.

நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் சட்ட ஆலோசகராக இருக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட தீவிரவாதியாகவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தடை செய்யப் பட்ட போதும் நீதிக்கான சீக்கியர்கள், இந்தியாவுக்கு எதிரான சதிச் செயல்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், தீவிரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கடந்த ஜூலை மாதம், மத்திய அரசு, இந்த அமைப்புக்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த சுழலில், காலிஸ்தான் ஆதரவு வாக்கெடுப்புக்கு எதிராக தனது பிடியை மத்திய அரசு இறுக்கி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் காலிஸ்தான் வாக்கெடுப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் இணைக்கப்பட்டிருந்த சுமார் 10,500 URLகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் கலந்து பேசி ஆதாரங்களின் படி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 28,079 URLகள் முடக்கப் பட்டுள்ளன. இதில் சுமார் 10,976 URLகள் மோசடி திட்டங்களின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக்கில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், காலிஸ்தான் ஆதரவு எக்ஸ் தளத்தில், சுமார் 10,139 URL-கள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 2,211 யூடியூப் 2,198 இன்ஸ்டாகிராம் , 225 டெலிகிராம் மற்றும் 138 வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 6,775 சமூக ஊடக கணக்குகள் முடுக்கப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டில் 12,483 கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில் மட்டும் இதுவரை 8,821 சமூக வலைதளக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 3,417 எக்ஸ் கணக்குகளும் 2023 ஆம் ஆண்டில், 3,772 எக்ஸ் கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டு,செப்டம்பர் மாதம் வரை சுமார் 2,950 எக்ஸ் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.

YouTube ஐப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில், 809 கணக்குகளும் 2023 ஆம் ஆண்டில் 862 கணக்குகளும் இந்த ஆண்டு 540 கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில்,355 கணக்குகளும், 2023 ஆம் ஆண்டில் 814 கணக்குகளும் இந்த ஆண்டு, இதுவரை 1,029 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியா - கனடா இடையிலான அரசாங்க உறவுகளில் மோதல் போக்குகள் உச்சமடைந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை அரசியல் வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்

Advertisement
Tags :
Khalistan extremist ideologyseparate state for Sikhs10000 sikhs urlsGurbatwant Singh BannunJustice organizationFEATUREDMAINcentral governmentprime minister modiKhalistan extremist
Advertisement
Next Article