செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் - சென்னை மேயர் அறிவிப்பு!

06:59 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று, மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Advertisement

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேற்று தொடங்கிய மாமன்ற கூட்டத்திலும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் 356 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 49 ஆயிரத்து 147 குழந்தைகள் பயன்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் வெளி நிறுவனத்தின் வாயிலாக காலை உணவு சமைத்து பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைத்து வழங்கும் பணியை சென்னை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Chennai Metropolitan CorporationChief Minister's breakfast schemeChief Minister's breakfast scheme issueMAINMayor Priya.
Advertisement