கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!
03:49 PM Nov 26, 2024 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய் உடைந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
Advertisement
மேலபசலை கிராமத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் கீழத்தெருவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்துவந்த மக்கள், அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ள பாதிப்பு காரணமாக கடும் அவதிக்கு உள்ளான மக்கள், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement